18 வயதில் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டாராம் ஸ்டீவ் ஜாப்ஸ் இதற்கு அவர் கூறிய காரணம்
நான் தொடர்ந்து படிப்பதானால் எனது பெற்றோருக்கு அது பெரும் சுமையாக இருக்கும் என்பதுதான். அதன் பின்னர் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது ஆப்பிள் நிறுவனத்தை 1973 இல் இந்தியா வந்து சென்ற பின்னரே ஆரம்பித்தார். தாமஸ் அல்வா எடிசன் இவ்வுலகை மேம்படுத்த மற்றவர்களை விட இவர் எவ்வளவோ செய்திருக்கிறார் என்பார், ஸ்டீவ் ஜாப்ஸ்.
பின்னாளில் தொழில்நுட்ப உலகின் பெரும் புரட்சியை உருவாக்க இதுவே அவருக்கு உந்து சக்தியாக இருந்திருக்கலாம். 1997 இல் மைக்ராசாப்ட் உடன் இணைவதாக அறிவித்ததும் பார்வையாளர்களிடையே சலசலப்பு. சிலர் இல்லை வேண்டாம் என்றே கூறினர்.
திடீரென பில்கேட்ஸ் திரையில் தோன்றி பேசத் தொடங்கினார். அதிர்ந்தே போனார்கள் பார்வையாளர்கள்.ஆனால் இன்று வரை மைக்ராசாப்டை பாட்னராக சேர்த்துக்கொண்டமை ஸ்டீவின் மிகத் திறமையான முடிவாக கருதப்படுகிறது.
ஒவ்வொருமுறையும் ஒரு புதிய அறிமுகத்தை உலகிற்கு காட்டும்போது அதைக் கொண்டுவர்ந்து சேர்க்கும் ஸ்டீவ் ஜாப்ஸின் ஸ்டைலே தனி! இதற்காகவே ஆப்பிள் தயாரிப்புக்களின் ஏராளமான ரசிகர்கள் காத்துக்கிடப்பார்கள். ஐபோனின் அண்மைய பதிப்பான ஐபோன் 4S ஐ ஆப்பிள் அறிமுகம் செய்த மறுதினமே அவரின் மரணச் செய்தியும் வந்தது மிகப்பெரும் சோகம். 1984 ஆம் ஆண்டு முதல் முதலாக ஆப்பிள் கணினியின் மாக்கின் டாஸை அறிமுகம் செய்ததிலிருந்து ஸ்டீவ் ஜாப்ஸின் டாப் 10 மாஜிக்கல் தருணங்களை இங்கே பார்க்கலாம் உலகை மாற்றிய மூன்று ஆப்பிள்கள் மற்றும் "iPod iPhone iPad - now iSad" ஆகிய வசனங்கள் தற்போது பேஸ்புக்கில் மகா பிரபலம். 1000 பாடல்கள் உங்கள் சட்டைப்பையில் என்ற மிக இலகுவான கான்செப்டை வைத்து 2001 இல் Ipod ஐ உருவாக்கியது ஆப்பிள். இதுவே அப்போது மற்றவர்களுடைய தயாரிப்புக்களில் இருந்து வேறுபட்டு பெரும் வரவேற்பை பெற அடுத்து இரு வருடங்களுக்குள் ஐடீயூன்ஸை கொணர்ந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
சரியாக 8 வருடங்களில் இசை விற்பனை இன்டஸ்டிரியையே புரட்டி போட்டது ஐடியூன்ஸ் மியூசிக் ஸ்டோர். இன்று வரை இசை விற்பனையில் அதுவே நம்பர் வன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக