ஒரு ஆணுக்கு ஒரு பெண் மிக அழகாக தெரியும் நான்கு பருவங்கள்
======================================== ===========பெண்களுக்கு அருஞ்சொற்ப்பொருள் 'அழகு' என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு ஆணின் கண்களுக்கு சில சமயங்களில் பெண்கள் மிக மிக அழகாக தெரியும் நான்கு பருவங்கள் எதுவாக இருக்கும் என்று சிந்தித்தால் இந்த நான்கை தவிர வேறொன்றும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இதோ....
1 .வயிற்றின் மீது அமர்ந்து கொண்டு நெஞ்சில் ரோமங்களை பிய்த்து விளையாடி கொண்டு கொஞ்சு மொழியில் "அவ்ப்ப, அப்பா..." என தன் மகள் முதன் முதலில் கூறுவதை கேட்கும் போது ஒரு தந்தைக்கு ###மழலை##
2. தன்னோடு சகஜமாக பேசிக்கொண்டும் சண்டையிட்டு கொண்டும் பழகிய தோழி திடீரென வரமால் ஒரு மாதம் கழித்து பெரிய மனுஷியாகி வகுப்பறையில் நுழைந்தும் அவள் ஒன்றும் பேசாமல் மௌனத்தை மட்டும் பதிலாக தரும்போது அவளின் சக தோழனுக்கு ##இளமை##
3. மனைவியை வளைகாப்பு முடிந்து அவளின் தாய் வீட்டில் விட்டு விட்டு மூன்றும் மாதம் கழித்து அவளைக்காண செல்லும் போது நிறை மாத வயிற்றை பிடித்து கொண்டு அவள் வந்து "ரொம்ப இளச்சிட்டிங்களே" என பரிவோடு சொல்லுகையில் ஒரு கணவனுக்கு ##தாய்மை##
4. அழுவலகத்தில் ஆயிரம் வேலைகளை முடித்து, பிள்ளைகள் பள்ளி பாடங்களுக்கு உதவி செய்து விட்டு, மனைவியின் புலம்பல்களை கேட்டு விட்டு அப்பாடா! என வரண்டாவில் இரவு வந்து உட்காரும் போது, அம்மா தலை கோதி "சாப்ட்டியாடா..? " எனக்கேட்கும் போது ஒரு மகனுக்கு ##முதுமை##
========================================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக