திங்கள், 5 செப்டம்பர், 2011

கோபிநாத்தின் புத்தகம் ..ஒரு விமர்சனம்





கோபிநாத்தின் புத்தகம் ..ஒரு விமர்சனம்

இந்தப் புத்தகத்தை வாங்குங்க என்று சொல்லும் உலகில் ஒரு புத்தகத்தின் பெயர் ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க... வியப்பா இருக்கில்ல.. நீயா., நானா எனக் கேட்டால் உங்களுக்குப் புரிந்துவிடும்.. அதன் பதில் நாம் என்பதும்,, நம்ம கோபிநாத்தின் புத்தகம்தான் அது என்பதும் ,,. சிக்ஸ்த் சென்ஸ் வெளியிட்டுள்ள இதன் விலை அறுபது ரூபாய்.. பர்சனாலிடி டெவலப்மெண்ட்... பவர் ஆஃப் பாசிடிவ் திங்கிங் என்பதன் விளக்கம் இது ..

அவருக்குக் கிடைத்த வாய்ப்பில் அறிந்து கொண்டவற்றை அவர் நம்மில் ஒருவராகப் பகிர்ந்து கொள்கிறார்.. நாம் ஓடிக்கொண்டிருக்கும் திசையின் இலக்கு என்ன என்று யோசிக்க வைக்க இந்தப் புத்தகம் பயன்படலாம். கணக்குகளின் எண்ணிக்கை அதிகம் ஆகும்போது கால்குலேட்டர் உபயோகிப்பதுபோல் இந்தப் புத்தகம் பயன்படும் என்கிறார் தன் முன்னுரையில்..

தன்னம்பிக்கைக்கு் தன்னடக்கத்திற்கும் முழுமையான உதாரணம் கோபிநாத்,..ஏறக்குறைய 14 விதமானவர்களுக்கு நன்றி கூறி தன் தன்னம்பிக்கையை தன்னைவிட அதிகமாய் நம்பும் தன் அப்பாவுக்கு இந்தப் புத்தகத்தை சமர்ப்பித்திருக்கிறார்...

15 கட்டுரைகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது இது.. 

நம் சந்தோஷத்துக்கு நாமே முழுமையான காரணம்.. எல்லா உணர்வையும் வெளிப்படுத்தும் நாம் அன்பை மட்டும் வெளிப்படுத்தத் தயங்குகிறோம்.. எதைச் செய்தாலும் ரசனையோடு செய்யுங்கள்.. தினம் செய்தவற்றையே சிறிது புதிதாய் மாற்றி செய்து பாருங்கள்..

வாழ்வின் எல்லா கணங்களிலும் வெற்றி தோல்வி இருக்கிறது.. அடுத்தவர் கணிப்புக்காக அல்ல.. நமக்காகவே நாம் வாழ்கிறோம்.. பிரச்சனைகளின் ஆணிவேரைக் கண்டுபிடித்து பகுதி பகுதியாகக் களையுங்கள்..

நம்மை நாமே ரசிக்க ஆரம்பிப்பதுதான் நம் செயல்களின் வெற்றியின் முதல் படி.. தேவையான இடங்களில் விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாய் இருப்பது ஒரு மனோவியாதி..
நாம் செலுத்தும் அன்பு அடுத்தவரை துன்புறுத்தாமல் இருந்தால்., நம் அன்பு உண்மையானதாக இருந்தால் நிச்சயம் நாம் செலுத்தும் அளவு திரும்பக் கிடைக்கும்.. அன்பு செலுத்துவதிலும் ., பெற்றுக் கொள்வதிலும் கஞ்சமாகவோ., இரும்பாகவோ இராதீர்கள் ..

எண்ணம் போல் வாழ்வு என்ற சொல்போல என்னவாக விரும்புகிறீர்களோ அந்த நிலைக்கு மனம் உங்களை எடுத்துச் செல்லும். நம்மையும் சுற்றி இருப்போரையும் முழுமையாக நம்ப வேண்டும்.. நம் திறமைகளை எடுத்துக்கூறி நம்மை முன்னேற்றுவதில் நம் நலம் விரும்பிகளும் அன்பானவர்களும் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.. 

எனவே நம்மை மிக நல்ல உயரங்களுக்கு இட்டுச் செல்கின்றது இந்தப் புத்தகம்.. வெற்றியாளராக, சாதனையாளராக, மக்கள் அனைவராலும் விரும்பப் படுபவராக இருக்கும் கோபிநாத்தின் இந்தப் புத்தகம் எல்லா சமயங்களிலும் உபயோகமான ஒன்று,.. படித்துப் பாருங்கள்.. உணர்வீர்கள்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக