அப்பு வாகிய நான்
உங்களிடம் இதுவரை
பகிராத என் சோக கதை
ஆழித்தேரோடும் ஆரூராம்
திருவாரூரிலிருந்து
தடம் பதித்த தடயங்களை
திரும்பி பார்த்து தொடங்குகிறேன்
குழந்தை பருவம் எல்லோருக்கும் போல்
எனக்கும் இனிமையான பருவம் .
வாலிப பருவம்
என் வசந்தகாலத்தை வதைத்தது
என் கனவுகளை எட்டி உதைத்தது
என் ஊர்
எங்கெங்கு திரும்பினும்
பசுமை பாராட்டும் நெற்பயிரும்
சீராட்டும் கரும்பு தோட்டமும்
தாலாட்டி உறக்கம் அளித்த நாட்கள்
இது மட்டுமா
ஆட்சியில் எந்த கழகம் இருந்தாலும்
பச்சை வண்ணம் மாறா
அரசே நடத்தும் அமிர்தம் போன்ற மதுக்கடைகள்
நான் தள்ளாடி உற்சாகம் அடைந்த நாட்கள்
இப்படியாக தென்றலாக தவழ்ந்த வாழ்க்கையில்
புயல் வீசியது
உறவும் நட்பும் ஒன்று சேர்ந்து
திரவியம் தேட வளைகுடா தேசத்திற்கு
வழி அனுப்பி வைத்தனர்
திரும்பும் போது ஆரூர் அம்பானி
ஆகவேண்டுமாம் இது
அப்பாவின் கனவு
திரும்பிய பின் எடைக்கு எடை பொன்னோடு
பெண் பார்க்க வேண்டுமாம் இது
அம்மாவின் கனவு
சொந்தமாக தொழிற்சாலை அமைக்க வேண்டுமாம் இது
அண்ணனின் கனவு
உலகின் அணைத்து சரக்கையும்
சுவைக்க வேண்டும் இது
அடியேனின் கனவு
யாருக்கு தெரியும் என் மன உளைச்சல்
யாருக்கு புரியும் என் உள்ள புகைச்சல்
திரவியம் தேடவந்த இடத்தில்
திரவியம் கிடைத்தாலும்
சோகம் தீர்க்கும் திரவம் தான்
கிடைக்கவில்லை
என் மனம் தளரவில்லை
சொந்தமாக காய்ச்சலாமா என்று கூட
யோசித்தேன்
கள்ளசந்தையில் கிடைக்கும் நல்ல சரக்கை தேடி
பல நூறு மைல் அலைந்து வாங்கி வருகிறேன்.
வாரத்தில் ஏழு நாட்கள் மட்டுமே
தீர்த்தமாய் அருந்தி வாட்டத்தை போக்கிக் கொள்கிறேன்
ஒட்டகமாய் பிறந்திருந்தால் ஒரு நாள் பருகி
பல நாள் ஆடியிருப்பேன்
மது கிடைக்கா நாட்கள் மங்கை இல்லா ஆடிமாதமாய்
மனம் நோக வைக்கின்றன
என் தாய் திருநாட்டின் குடிமகன்கள் கண்டு
என் வயிறு எரிகிறது.
தீயணைப்பு கருவிகள் தயாரிக்கும் தொழிலில்
நானிருந்தாலும்
என் வயிற்று எரிச்சல் அணைப்போர் யாரோ?
உங்களிடம் இதுவரை
பகிராத என் சோக கதை
ஆழித்தேரோடும் ஆரூராம்
திருவாரூரிலிருந்து
தடம் பதித்த தடயங்களை
திரும்பி பார்த்து தொடங்குகிறேன்
குழந்தை பருவம் எல்லோருக்கும் போல்
எனக்கும் இனிமையான பருவம் .
வாலிப பருவம்
என் வசந்தகாலத்தை வதைத்தது
என் கனவுகளை எட்டி உதைத்தது
என் ஊர்
எங்கெங்கு திரும்பினும்
பசுமை பாராட்டும் நெற்பயிரும்
சீராட்டும் கரும்பு தோட்டமும்
தாலாட்டி உறக்கம் அளித்த நாட்கள்
இது மட்டுமா
ஆட்சியில் எந்த கழகம் இருந்தாலும்
பச்சை வண்ணம் மாறா
அரசே நடத்தும் அமிர்தம் போன்ற மதுக்கடைகள்
நான் தள்ளாடி உற்சாகம் அடைந்த நாட்கள்
இப்படியாக தென்றலாக தவழ்ந்த வாழ்க்கையில்
புயல் வீசியது
உறவும் நட்பும் ஒன்று சேர்ந்து
திரவியம் தேட வளைகுடா தேசத்திற்கு
வழி அனுப்பி வைத்தனர்
திரும்பும் போது ஆரூர் அம்பானி
ஆகவேண்டுமாம் இது
அப்பாவின் கனவு
திரும்பிய பின் எடைக்கு எடை பொன்னோடு
பெண் பார்க்க வேண்டுமாம் இது
அம்மாவின் கனவு
சொந்தமாக தொழிற்சாலை அமைக்க வேண்டுமாம் இது
அண்ணனின் கனவு
உலகின் அணைத்து சரக்கையும்
சுவைக்க வேண்டும் இது
அடியேனின் கனவு
யாருக்கு தெரியும் என் மன உளைச்சல்
யாருக்கு புரியும் என் உள்ள புகைச்சல்
திரவியம் தேடவந்த இடத்தில்
திரவியம் கிடைத்தாலும்
சோகம் தீர்க்கும் திரவம் தான்
கிடைக்கவில்லை
என் மனம் தளரவில்லை
சொந்தமாக காய்ச்சலாமா என்று கூட
யோசித்தேன்
கள்ளசந்தையில் கிடைக்கும் நல்ல சரக்கை தேடி
பல நூறு மைல் அலைந்து வாங்கி வருகிறேன்.
வாரத்தில் ஏழு நாட்கள் மட்டுமே
தீர்த்தமாய் அருந்தி வாட்டத்தை போக்கிக் கொள்கிறேன்
ஒட்டகமாய் பிறந்திருந்தால் ஒரு நாள் பருகி
பல நாள் ஆடியிருப்பேன்
மது கிடைக்கா நாட்கள் மங்கை இல்லா ஆடிமாதமாய்
மனம் நோக வைக்கின்றன
என் தாய் திருநாட்டின் குடிமகன்கள் கண்டு
என் வயிறு எரிகிறது.
தீயணைப்பு கருவிகள் தயாரிக்கும் தொழிலில்
நானிருந்தாலும்
என் வயிற்று எரிச்சல் அணைப்போர் யாரோ?
—
படம் நண்பன் ராஜ்{ போட்டோ ஷாப் }
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக