வியாழன், 30 ஜூன், 2011

நன்றி ..நன்றி...நன்றி.


என்னை வெறுத்தவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், அவர்கள் என்னை மேலும், வலிமையுடையவனாக மாற்றினார்கள்.

என்னை நேசித்தவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், அவர்கள் என் இதயத்தை விரிவடையச் செய்தார்கள்!

என்னைக் குறித்துக் கவலைப்பட்டவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், என் மீது அக்கறையுடையவர்கள் பலர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை அவர்கள் தந்தார்கள்!

என்னை விட்டுப் பிரிந்தவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், உலகில் எதுவும் நிலையானதில்லை என்று, அவர்கள் எனக்கு உணர்த்தினார்கள்!

என் வாழ்க்கையில் புதிய வரவாக நுழைந்தவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், நான் இன்று யாராக இருக்கிறேனோ, அதற்கு அவர்கள் காரணமாக இருந்தார்கள்!

குழந்தை

பள்ளிக்கு செல்லவில்லை என அழுதுபுரண்டு அடம்பிடிக்கும் குழந்தைக்காக பார்க்கும் பரிவால்தான்.பின்னாளில் இவந்தான் வேணுமுன்னு சாப்பிடாம கிடப்பா

செவ்வாய், 28 ஜூன், 2011

மொக்கை

நேரு சொன்னார் சோம்பேறித்தனம் மிகப்பெரிய எதிரி


காந்தி சொன்னார் உங்கள் எதிரிகளை நேசியுங்கள்’னு

மாமா சொல்ரதை கேக்கனுமா தாத்தா சொல்றதைக்கேக்கனுமா # மிகப்பெரிய டவுட்டு
_________________________________________________________________________
”எல்லாருக்கும் சொர்க்கத்துக்கு போகனும்னு ஆசை ஆனா யாருமே சாகனும்னு ஆசைப்படரதில்லை”


அதே மாதிரி தான்

நமக்கெல்லாம் பாஸாகனும்னு பேராசை ஆனா படிக்க சொன்னா யாரும் கேட்டுக்கரதில்லை :)))
_________________________________________________________________

வாழ்க்கையில பிறந்த நாள், இறப்பு நாள், கல்யாண நாள், இளமை, முதுமை எல்லாமே ஒரு முறை தான் ஆனா இந்த செமஸ்டர் எக்ஸாமை எவண்டா கண்டுபிடிச்சான் ஆறுமாசத்துக்கு ஒரு முறை வச்சு தொலைக்கிறாங்களே!
________________________________________________________________

தினமும் நீச்சல் அடிச்சா வெயிட்டு குறைஞ்சு ஸ்லிம் ஆகிடுவோம்னு சொல்ராங்க ஆனா இந்த திமிங்கலம் வாழ்க்கை பூரா நீச்சல் அடிச்சிட்டே தானே இருக்கு அது மட்டும் ஏன் ஸ்லிம் ஆகவே மாட்டேங்குது?
___________________________________________________________________________

தமிழ்: டேய் நம்ம கணக்கு மாஸ்டருக்கு அறிவே இல்லடா


முத்து: ஏண்டா அப்படி சொல்ரே?

தமிழ்: அவரோட நாலாவது பொண்ணுக்கு “அஞ்சு”னு பேரு வச்சிருக்காரு
____________________________________________________________________

கொசு: அம்மா நான் சினிமாவுக்கு போறேன்

அம்மாகொசு: அங்கே எல்லாரும் கை தட்டுவாங்க, உசாரா இரு

கொசு: இல்லம்மா நான் விஜய் படத்துக்கு தான் போறேன்
______________________________________________________________________________
டீச்சர்: ஏண்டா வீட்டுப்பாடம் எழுதலை


மாணவன்: எங்க வீட்ல கரண்ட் இல்ல சார்

டீச்சர்: மெழுகுவத்தி ஏத்தி படிக்கவேண்டியது தானே

மாணவன்: வத்திபெட்டி சாமி ரூம்ல இருந்தது சார், நேத்து நான் குளிக்காததுனால சாமி ரூம்க்குள்ள போகல சார்

டீச்சர்: ஏன் குளிக்கலை

மாணவன்: தண்ணியில்ல சார் மோட்டார் ஓடலை

டீச்சர்: ஏன் மோட்டர் ஓடலை

மாணவன்: எத்தனை முறை சார் சொல்ரது எங்க வீட்ல கரெண்ட் இல்லைன்னு

என்னோட அட்வைஸ் : மை டியர் ஃப்ரண்ட்ஸ் வீட்டுபாடம் எழுதலைன்னா கவலைபடாதீங்க இதுமாதிரி எதுனா டயலாக் சொல்லி ஏமாத்திடலாம் :))))

டிஸ்கி: நானே இதை காபியடிச்சு தான் எழுதியிருக்கேன் யாராச்சும் இதை காபி பண்ணீங்கன்னா அவங்க நா........ போக!!!

திங்கள், 27 ஜூன், 2011

ஏமாற்ற முடியாது

யாரும் யாரிடமும் ஏமாறலாம் தற்காலிகமாக ஆனால் யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது நிரந்தரமாக...

அம்மாவின் கதறல் (... A Mothers Cry who lost her son in an accident )


ஆறு வருஷம் தவமிருந்தேன், 
அரசாள நீ பொறந்த.
மா தவத்தால பொறந்ததால,
மாதவன்னு பேரு வெச்சேன்.

தகப்பனே தெரியாம,
தனியாத்தான் நீ வளந்த.
தாயான எனக்குள்ள,
உசுராத்தான் நீ நொழஞ்ச.

சிப்பிக்குள் முத்தாக என்
கருவறையில் நீ உதிச்ச,
அனாதையா இருந்தவளுக்கு
அரவணைப்பா நீ சிரிச்ச.

எந்த திசை போனாலும்
நிலவைப்போல நீ ஜோலிச்ச,
ஊருமக்கா எல்லோரையும்
உன் சிரிப்பால நீ கவுத்த.

ஒரு நிமிஷம் பிரிஞ்சாலும்
யுகமாத்தான் எனக்கிருக்க,
எனப்பிரிஞ்சு பட்டணம் போய்
கம்ப்யூட்டர் நீ படிச்ச.

உனக்கிருக்கும் திறமைக்கு
வெளிநாடு நீ போக
மனசார அனுப்பி வெச்சேன்,
....................................................
என் மகனே..............................
...................................................
பொணமாத்தான் திரும்பி வந்த.

பூப் போல மனசுனக்கு உன்ன
பூகம்பம் விழுங்கியதோ.
கல் நெஞ்சுக் கடவுளவன்
எனை விட்டு உன்னை எடுத்தானே.

சோறூட்ட நா வேணும்,
தலை துவட்ட நா வேணும்,
எனை அங்கு காணாமல்,
துயரேதும் உண்டோடா.

மனச்சார செத்துட்டேன்,
ஒரு நாழி பொறுத்துக்கோ
துணைக்கங்கு நா வாரேன்,
..... என் உசுரே.....................

ஞாயிறு, 19 ஜூன், 2011

தோல்வி

நமது இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியுமெனில் நாம் தோற்றுக் கொண்டிருப்பதாக அர்த்தம்

இயல்பு

தங்களிடம் இருப்பதை அறியாமலும்..இல்லாதவற்றை உணராமலும் இருப்பதுதான் மனிதர்களின் இயல்பு

தனிமை

தனிமையில் தள்ளப்படுபவன் கண்டிப்பாக நல்லவனாக இருந்திருப்பான். ஏனெனில் நல்லவர்களுக்கு நல்ல உறவுகள் நிலைப்பதில்லை

தேர்வு

வாழ்வின் எல்லா தருணங்களும் பாடங்கள் அல்ல சில நேரங்கள் தேர்வுகளும் நடத்தப்படும்..எத்துணைதான் படித்தாலும் பல நேரங்களில் தோற்று விடுகிறேன்..

புரியாத விஷயங்கள்

புரியாத சில விஷயங்கள் புரியாமல் இருப்பதே நல்லது, புரிந்து கொள்ள முயலும் போது புரியக்கூடாத சில விஷயங்களும் புரிந்து விடும் என்பதால்.

வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்கள்

வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்கள் அர்த்தமற்று போகையில் அத்தருணத்தை நினைக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் ஏனோ மனம் படும்பாடு கொடுமைதான்

வாழ்கையின் முயற்சி

வாழ்கையின் பல கேள்விகளுக்கு விடை அறிய முயல்வது வாழ்வை தொலைக்க நாம் செய்யும் முதல் முயற்சியாகும்.

இசை

'இசை' என்ற ஒன்று மட்டும்தான் என்னை தனிமையில் விட்டு என்றுமே பிரிந்து சென்றதில்லை அதன் மீதான என் ஒரு தலைக்காதலை மதித்து...

?கற்றுக் கொண்டே இருக்கிறேன்..

துயரமான தருணங்களே வாழ்கையின் பாடங்கலாம் - பாடங்கள் மட்டும் நிறைந்ததோ என் வாழ்கை....?கற்றுக் கொண்டே இருக்கிறேன்...

அன்பு காட்டாதீர்கள்

யாரிடமும் அதிக அன்பு காட்டாதீர்கள்.ஒரு தருணத்தில் உங்களால் இயலாதபோது,உங்களன்பை அதுவரை பெற்றவர்க்கு அது மரணத்தை விட கொடிய தருணமாக இருக்கும்
சில நேரங்களில் நான் நானாக இருக்கிறேன்...பல நேரங்களில் இயலாமல் போகிறது நினைவுகளின் நிழல்களில் வாழ்வதால்...

படித்ததில் பிடித்தது

என் கைகள் மட்டுமே அறியும் என் சோகங்களை...என் துயரமான தருணங்களில் என் விழி நீரை துடைத்தவை அவைதானே...

இதுதாங்க வாழ்க்கை


வாழ்கையின் மூன்று நிலைகள்


பிறந்ததில் இருந்து இறக்கும் வரை என்னதான் ஆட்டம் போட்டாலும்,எல்லாம் காலகட்டத்திலும் எல்லாவித ஆசையும் நிறைவு செய்யமுடியாமல் உள்ளது.
அவைகள் எவை?

பருவக்காலம்...

செலவிட நேரம் அதிகமாக இருக்கும்.
உடல் வலு தேவைக்கு அதிகமாக இருக்கும்
ஆனால்
கையில் பணம் இல்லை !


இளமைக்காலம் (தொழில்புரியும் வயது)

கையில் தேவைக்கு அதிகமாக பணம் இருக்கும்.
உடலில் தேவையான அளவு வலு இருக்கும் .
ஆனால்..
அனுபவிக்க நேரம் இல்லை!


முதுமைக்காலம்

கையில் பணம் இருக்கும்.
தேவைக்கு அதிகமாக நேரம் இருக்கும்.
ஆனால்
அனுபவிக்க உடலில் வலு இருக்காது.

இதுதாங்க வாழ்க்கை .........................