வெள்ளி, 29 ஜூலை, 2011

அமெரிக்காவில் கலக்கும் மின்சார தமிழர்

அமெரிக்க மக்கள் அனைவரும் ஒரு தமிழரைப் பற்றி வியப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தானே!
அந்தத் தமிழர் பெயர் கே.ஆர். ஸ்ரீதர். இவர், சாதாரண தமிழர் அல்ல.. மின்சாரத் தமிழர். சற்று பீடிகையாக இருந்தாலும் மேலே படியுங்கள்... நீங்களும் பாராட்டத் தொடங்கி விடுவீர்கள்...

உலகம் முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை என்பது தவிர்க்க முடியாத நிலையாகிவிட்டதால், மின் உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்கலாம் என அனைத்து நாட்டு வல்லுநர்

களும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒருவர் தனது வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை வீட்டில் வைத்தே உற்பத்தி செய்து கொள்ளலாம் என்ற அறிவித்ததோடு,செயலிலும் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் கே.ஆர். ஸ்ரீதர். ஆச்சரியம்தானே?

1960-ம் ஆண்டு பிறந்த கே.ஆர். ஸ்ரீதர், திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் கடந்த 1982-ம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் பயின்றார். தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் அணு பொறியியல் பட்டம் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்ற கே.ஆர். ஸ்ரீதருக்கு, உடனடியாக வேலையைக் கொடுத்தது நாசா நிறுவனம். செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக் கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்ற ஆராய்ச்சிப் பணியில் தனது சகாக்களுடன் ஈடுபட்டு வந்தார் கே.ஆர். ஸ்ரீதர்.

ஆனால், இந்த ஆராய்ச்சியை அமெரிக்க அரசு திடீரென நிறுத்தியதால் சற்று அதிர்ச்சியடைந்த கே.ஆர். ஸ்ரீதர், தற்செயலாக ஒரு பணியில் ஈடுபட்டார். அதுவே அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.

ஏதோ ஒரு சக்தியில் இருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக, ஆக்ஸிஜனை வைத்து அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியைச் சேர்த்தால் என்ன நடக்கிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார் ஸ்ரீதர்.

என்ன ஆச்சரியம்! ஆக்ஸிஜனும், இயற்கை எரிவாயுவும் சேரும்போது மின்சாரம் உருவாவதை உணர்ந்த ஸ்ரீதர், மேற்கொண்டு சில மாற்றங்களைச் செய்து உருவாக்கியதுதான் "ப்ளூம் பாக்ஸ்' என்ற மின்சார உற்பத்திப் பெட்டி.

தனது தொழில்நுட்பத்துக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்த ஸ்ரீதர், அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப்பெரிய நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜான் டூயரை நாடினார்.

இந்த ஜான் டூயர் சாதாரண ஆள் கிடையாது. நெட்ஸ் கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களுக்குத் தொடக்கத்தில் முதலீடு செய்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.

ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஒப்புக்கொண்ட ஜான் டூயர் செய்த முதலீடு 100 மில்லியன் டாலர். இந்திய மதிப்புப்படி, ஏறத்தாழ |490 கோடி. ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என்பதால் இந்த முதலீடை ஜான் டூயர் செய்தார்.
                                                                   நம்ம தமிழன் டா

வியாழன், 14 ஜூலை, 2011

என்னுள்

இந்த உலகத்தை விட பெரிய உலகம் ஒன்று என்னுள் இருக்கிறது ,அதை சுமந்தே அலைகிறேன் நான்.

புதன், 6 ஜூலை, 2011

வாழ்க்கை

வாழ்க்கை  புரியும் முன்போ  துவங்குகிறது  புரியும்  போது முடிவடைந்து விடுகிறது  

செவ்வாய், 5 ஜூலை, 2011

வெளிநாட்டில் வாழ்க்கை

வெளிநாட்டில் வாழ்க்கை சொகுசாய் இருப்பது போல் தோன்றும்.
ஆனால் ஓர் இழப்போ துக்கமோ வரும் வேளையில் சேர்ந்து அழ ஆளில்லாமல் துவளும்போது தெரியும் வெளிநாட்டில் வாழ்வதில் உள்ள வலி.
நான் இந்த வலியை உணர்ந்தும் இருக்கிறேன், ஆனால் தெளிவாக இந்த உணர்வுகளை எழுத்தில் கொண்டு வர முயன்றதில்லை.
அதை கீதா ரவிச்சந்திரன் என்பவர் தனது இழப்பு என்கிற பதிவில் செய்திருக்கிறார்.
இத்தகைய இழப்புக்கள் நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகளை யாரிடம் சொல்லி புரிய வைக்க முடியும்?
நாம் நேரில் செல்லவில்லை என்ற காரணத்தினால் நமக்கு பாதிப்பு இல்லை என்று அர்த்தமில்லை. மனித இழப்புக்களுக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறுவது எவ்வளவு தூரம் ஆறுதல் அளிக்கும்?

திங்கள், 4 ஜூலை, 2011

அப்பா

அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது

அப்பாஅம்மா

அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...

அப்பா

கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?

முதல் நம்பிக்கை

ஒவ்வொரு குழந்தையின் முதல் நம்பிக்கையும், எப்படியும் அம்மா பிடித்து விடுவாள் என்று எழுந்து நடை பழகுதில் தான்

வெள்ளி, 1 ஜூலை, 2011

வெற்றி பெரும்வரை

வெற்றி பெரும்வரை வாழ்வில் எல்லோருக்கு எல்லாம் கிடைப்பதில்லை,வெற்றி பெற்றால் எல்லாமும் எல்லோரும் கிடைப்பார்கள் முன்பு இழந்ததை விட

மகிழ்ச்சி

நமக்குப் பிடித்த அதிகம் பேசாத நபர் மகிழ்ச்சியில் நிறைய பேசும்போது மனதுக்கு நெருக்கமாக உணரப்படுகிறார்..

நாம் சென்ற பாதை

சில நேரங்களில் நாம் சென்ற பாதை நெடுந்தூரம் இருக்கலாம் - அனுபவசாலிகள் திரும்பி வருவது குறுகியதூரம்

அன்பு

அன்பு கொடுக்கப்படும்போது பெருமிதமோ அல்லது பெறப்படும்போது கூச்சமோ இருக்குமாயின் அந்த நட்போ/காதலோ நீடிக்காது!

தனிமை

தனிமை என்பதில் இரண்டுவகை உண்டு. உங்கள் உடலின் அருகில் யாருமில்லாதிருப்பது, மனதின் அருகில் யாருமில்லாதிருப்பது! இரண்டாவது வகைதான் கொடுமை!